தமிழகத்துக்கு 4,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணையம் உத்தரவு
24 Sept 2026, 9:53 pm
<p><strong>தமிழகத்துக்கு 4,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணையம் உத்தரவு</strong></p><p>புதுதில்லி, செப். 24 -புதுதில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காணொளி மூலம் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு,கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள்பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுகுழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளது.</p>
