முந்தய பக்கம்

தவெக கூட்டணியை பழனிசாமி ஏற்கவில்லைசி.வி. சண்முகம் ஆவேசம்!

10 Aug 2026, 9:44 pm
தவெக கூட்டணியை பழனிசாமி ஏற்கவில்லைசி.வி. சண்முகம் ஆவேசம்!

தவெக கூட்டணியை பழனிசாமி ஏற்கவில்லைசி.வி. சண்முகம் ஆவேசம்!

சென்னை, ஆக. 10 -சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நடுவே, அதிமுக எம்எல்ஏ சி.வி. சண்முகம், அவையிலிருந்து வெளியே வந்துசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கடும் விமர்சனம் வைத்தார்.“எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறோம். சொந்த மாவட்டத்திலேயே பழனிசாமி செல்வாக்கை இழந்து விட்டார். திமுகவுடன் கூட்டணி வைக்கதாங்கள் ஆலோசனை வழங்கியதாக எடப்பாடி தரப்பு கூறுவது வடிகட்டிய பொய். திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற யோசனையை நான் முன்மொழிந்தேன், ஆனால் எடப்பாடிபழனிசாமி ஏற்கவில்லை. தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறினேன், அதையும் ஏற்கவில்லை” என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல், பழியை கட்சி நிர்வாகிகள் மீது பழனிசாமி சுமத்துவதாகவும், முன்னர் அமமுக, தேமுதிக கட்சிகளைதிட்டமிட்டு கூட்டணியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Share
FacebookXWhatsAppTelegram