விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்காக துண்டேந்தி நின்ற இருவர்!
11 Aug 2026, 11:08 pm

விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்காக துண்டேந்தி நின்ற இருவர்!

ஈரோடு, ஆக.11-நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவிஞ்ஞானி சர்.சி.வி.ராமன், கப்பலில்சென்று விருதை பெறுவதற்காக தமிழ்நாட்டில் சிங்காரவேலர் மற்றும் ஜி.டி.நாயுடு ஆகியோர் துண்டேந்தி நிதி வசூல் செய்து, அவரைஅனுப்பி வைத்ததாக ஆயிஷா நடராசன் குறிப்பிட்டார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்களன்று நடைபெற்ற நிகழ்வற்கு, யுஆர்சி குழுமத் தலைவர் சி.தேவராஜன் தலைமை வகித்தார். மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இரா.ஜெயந்தி முன்னிலை வகித்தார். கான்பூர் - இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி வேதியியல்துறை இணைப் பேராசிரியர் அனந்தராஜ் செங்கேனி-க்கு, ஜி.டி.நாயுடு விருதினை அளித்து, அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமிசிறப்புரையாற்றினார். இதன்பின் கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் பேசுகையில், இந்திய அறிவியல் இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறது. அனுமார் குரங்கு தான்முதன்முதலில் விண்வெளியில் சென்றது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கிறார்.

பரத்வாஜ முனிவர் தான் விமானத்தை கண்டுபிடித்தார் என்று பேசிக்கொண்டிருக்கிறார் ஒரு ஆளுநர். இதையெல்லாம் மீறி, ஒரு ஐஐடியில், மறுபிறப்பு பற்றி இப்போது பாடம் வந்திருக்கிறது.

நம்முடைய நாடு, ஒரு அறிவியல் தேசமாக பகுத்தறிவு நாடாக மிளிர வேண்டும் என்பது, இந்த மண்ணின் மைந்தன்தந்தை பெரியாரின் மிகப்பெரிய நோக்கம். இன்றைக்கு கியூபா நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறது. குரல் வளையை நெரித்துக் கொண்டிருந்தாலும், ஒரு அறிவியல் தேசமாக கியூபா இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா விழித்துக்கொண்ட 150 ஆவது ஆண்டில் திரும்ப நாம் விழித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ராமன் விளைவுதீவிரமாக செயல்பட்ட ஒரு மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார், ஏழு முறை நுழைவுத்தேர்வு எழுதி ஏழு முறையும் முதலிடம்பெற்றார். ஆனால், இரண்டாம் இடம் பெற்ற வெள்ளையருக்குத்தான் மரியாதை அளிக்கப்பட்டது. அவர் கொல்கத்தாவில் இந்தியன்அசோசியேஷன் பார் கல்டிவேஷன்ஆப் சயின்ஸ் என்று ஒரு அமைப்பைஏற்படுத்தினார். இதனிடையே, 16வயதிலே பட்டம் பெற்று, 19 வயதிலே ஐசிஎஸ் தேர்விலே முதலிடம்பிடித்த சர்.சி.வி.ராமன், இந்திய அசோசியேஷன் பார் கல்டிவேஷன் ஆப் சயின்ஸ் ஆய்வகத்திற்கு சென்றார். அங்கிருந்த மகேந்திரலால் சர்க்காரின் மகன் அமிர்தலால் சர்க்கார், இந்தியாவின் முதல் நாத்திகர்என்று வரலாறு சொல்கிறது. அவரிடம் மாலை நேரத்திலே இங்கு ஆய்வுகள் செய்யலாமா? என்று ராமன் கேட்டார். இதன்பின் இரவு12.30 மணி 1 மணி வரை ஆய்வு செய்துவிட்டுச் செல்வார். இந்திய ஆய்வகத்தில் இந்தியாவில் கிடைக்கும் பொருளைக்கொண்டு ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ராமன் விளைவு.

நோபல் பரிசுமிரண்டு போன பிரிட்டிஷ் அரசாங்கம் 1909 ஒரே ஆண்டில் ராமன் ஐந்து முறை டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். ரங்கூனிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ராமன், இந்திய அறிஞர்களுக்காக, தன் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். அசுதோஷ் முகர்ஜி போன்றவர்கள் உடனே தலையிட்டு,கொல்கத்தா பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது. அப்போதிருந்த அக்கவுண்ட்ஸ் ஜெனரல் பதவில் 50 சதவிகிதம் சம்பளம் கூட கிடையாது.

ஆனால், அவர் ஏற்றுக்கொண்டார். இந்தியன் ஜர்னல் ஆப் பிசிக்ஸ் என்று இந்தியாவுக்கான இயற்பியல் இதழை 1926 ஆம் ஆண்டு தொடங்கினார். அதனுடைய நூற்றாண்டு தொடர்கிறது. நோபல் பரிசுஅறிவிக்கப்பட்ட மாமனிதர் சர் சி.வி.ராமன். நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தந்திக்கு 48 மணி நேரத்திற்குள்ள பதில் எழுதணும். ஆனால்,பிரிட்டிஷ் அரசாங்கம் மூணு நாள் கழிச்சுதான் தந்தியையே கொண்டு வந்து அவரிடம் கொடுத்தது. ஆனால், அவருடைய ஜெர்மன் தோழர்கள் மூலம் ராமனுக்கு தெரிய வந்தது.ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசை நேரில் சென்று வாங்கவில்லை, நீங்களும் போக வேண்டியதில்லை என்றனர்.பிரிட்டீஷ் அரசாங்கம் செலவை ஏற்கவில்லை. எப்படியாவது கப்பலிலே அவரை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாகேந்திரநாத் சர்க்கார்வேண்டிக்கொண்டார்.

அதற்காக தமிழகத்தில் துண்டேந்தி பணம் வசூலித்தார்கள். அப்படி துண்டேந்தி வசூலித்தவர்கள் இரண்டு பேர் தமிழ்நாட்டில் ஒருவர்சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இன்னொருவர் ஜிடி நாயுடு. ராமன்நோபல் பரிசை வாங்கும் பொழுது, இந்த நோபல் பரிசை, எங்கள் நாட்டின் சிறையில் வாடிக்கொண்டிருக்கும், லட்சக்கணக்கான விடுதலை போராட்ட வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அறிவித்தார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.