சுதந்திரத்தின் நினைவாக நட்ட மரங்களை வெட்டுவதா?
2 Feb 2026, 4:51 pm
<p><strong>சுதந்திரத்தின் நினைவாக நட்ட மரங்களை வெட்டுவதா?</strong></p>
<p>திருப்பூர், பிப்.2- இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நடப்பட்ட மரத்தை வெட்ட முயற்சிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் திங்களன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கோரிக்கை மனு அளித்த னர். அதில், பல்லடம் ஒன்றி யம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளிவேலம்பட்டி கிரா மத்தில் தற்போது சாலை விரிவாக்கப்பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சாலையிலுள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றி விட்டனர். எனினும் சாலை விரிவாக்கப்பணிக்கு தொந்தரவு இல் லாமல் இருந்தும் கூட, சாலையோரமாக உள்ள மூன்று பூவரசம் மரங்களை வெட்ட முயற்சிப்பது நியாயம் இல்லை. காளி வேலம்பட்டி பகுதியில் இன்றைக்கும் பேருந்து பயணிகள், வியாபாரிகள், பொது நிகழ்வுகள் என அனைத்திற்கும் பயனாக மக்களுக்கு நிழல் தரும் இடமாக இது விளங்குகிறது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதன் நினைவாக இந்த மரங்கள் நடப்பட்டது. இப்படி பாரம்பரியமாக வும், மக்களுக்கு பயன் தரும், சாலை விரி வாக்கத்துக்கு தொந்தரவு இல்லாத இந்த மரங்களை அகற்றுவது எந்த வகையிலும் சரியான நடவடிக்கையாக இருக்காது. எனவே, இந்த முடிவினை மறு பரிசீலனை செய்து மரங்களை வெட்டும் நடவடிக்கையை கைவிட்டு, மரங்களை பாதுகாக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்ன தாக, இந்நிகழ்வில், கட்சியின் பல்லடம் ஒன்றி யக்குழு உறுப்பினர் முருகேஷ், காளிவேலம் பட்டி கிளைச் செயலாளர் நாகராஜ், வாலி பர் சங்க நிர்வாகிகள் விமல்ராஜ், பிரவீன் குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
