முந்தய பக்கம்

நிலச்சரிவு ஏற்படும் இடத்திலிருந்த மரங்கள் வெட்டி கடத்தல்

10 Dec 2025, 4:08 pm
நிலச்சரிவு ஏற்படும் இடத்திலிருந்த மரங்கள் வெட்டி கடத்தல்
<p><strong>நிலச்சரிவு ஏற்படும் இடத்திலிருந்த மரங்கள் வெட்டி கடத்தல்</strong></p> <p>உதகை, டிச.10- குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்படும் இடத்திலிருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்ப வத்தால் கிராம மக்கள் அச்சமடைந் துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் உள் ளன. அந்த இடங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் மரங்கள் வெட்டு வதற்கும், பாறைகள் உடைப்பதற் கும் தொடர்ந்து தடை விதித்து வரு கின்றனர். இந்நிலையில், குன்னூர் பெள்ளட்டிமட்டம் அடுத்துள்ள எம குண்டு கிராமத்தில் உள்ள தனி யார் தேயிலைத் தோட்டத்தில் நிலச் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கரு தப்பட்ட இடத்தில் இருக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட மரங்கள் அனுமதி இல் லாமல் வெட்டப்பட்டு வருவதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இடம் நிலச்சரிவு அபாயமுள்ள இடம் என்று வருவாய்த்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வரும் சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரங்களை அவசர அவச ரமாக கடத்தும்போது பெள்ளட்டி மட் டத்திலிருந்து எமகுண்டு கிராமத் திற்கு செல்லும் குடிநீர் குழாயில் மர கட்டைகள் விழுந்து, குழாய்கள் சேத மானது. மர வியாபாரிகள் தங்களது வருமானத்தை ஈட்டுவதற்காக நிலச் சரிவு ஏற்படக்கூடிய இடத்தில் மரங் களை அழித்து வரும் சம்பவம் எம குண்டு கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறையினர், வரு வாய்த்துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram