தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘வானியற்பியல் ஆராய்ச்சி மையம்’ தொடக்கம்

13 May 2026, 10:19 pm
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘வானியற்பியல் ஆராய்ச்சி மையம்’ தொடக்கம்
<p><strong>தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘வானியற்பியல் ஆராய்ச்சி மையம்’ தொடக்கம்</strong></p><p>திருவாரூர், மே 13 - திருவாரூர் மாவட்டம் நீலக்குடி யில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கீழ், புதிதாக அமைக்கப் பட்டுள்ள ‘வானியல் மற்றும் வானி யற்பியல் ஆராய்ச்சி மையம்’ (Centre for Astronomy and Astrophysics) துவங்கப்பட்டது. விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் தலைமை ஏற்று பேசுகையில், “மாண வர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் குறித்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த பிரத்யேக ஆராய்ச்சி மையம் நமது பல்கலைக்கழகத்தில் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானி யல் ஆராய்ச்சி, தொலைநோக்கி செயல்பாட்டுப் பயிற்சி, வானியல் தரவு கள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு பயில ரங்கங்கள் நடத்தப்படும்” என்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் இரா.திருமுருகன், இயற் பியல் துறைத் தலைவர் முனைவர் மோகன்ராஜ் மற்றும் புதிய மை யத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் வி. மதுரிமா ஆகியோர் முன்னி லை வகித்த இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர் களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சம்பூர்ண ஆனந்த் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.