மின்சார வாகனங்களை விற்பதில் செலுத்தும் ஆர்வம் பராமரிப்பதில் இல்லை: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
28 Nov 2025, 2:28 pm
<p><strong>மின்சார வாகனங்களை விற்பதில் செலுத்தும் ஆர்வம் பராமரிப்பதில் இல்லை: வாடிக்கையாளர்கள் அதிருப்தி</strong></p>
<p>ஈரோடு, நவ.28- மின்சார வாகனங்களை விற்பதில் செலுத்தும் ஆர்வத்தை, பழுதடைந் தால் சரி செய்வதில் அந்நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை என வாடிக் கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். ஈரோடு - பெருந்துறை சாலையில் ஓலா நிறுவனத்தின் இருசக்கர மின்சார வாகன விற்பனை நிலையம் செயல் பட்டு வருகிறது. ரூ.ஒரு லட்சம் முதல் வாகனத்தின் விலை ஆரம்பமா கிறது. இந்நிறுவனம், வாகனம் வாங்கி 4 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர் இயக்கும் வரை பராம ரிப்பு உத்தரவாதம் அளிக்கிறது. இவ் வாறு பேட்டரி, மோட்டார், பிரேக் உள் ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அந்நிறுவனத்தை வாடிக்கையாளர் கள் நாடுகின்றனர். சாவி இல்லாமல் சென்சார் மூலம் இயங்கும் வாகனங் கள் கூடுதலாக பழுதடைவதாக கூறப்படுகிறது. இவ்வாறு வாகனங் களை கொண்டு செல்வோரை முடிந்த வரை திருப்பியனுப்ப எத்தனிக்கின்ற னர். காரணம் அங்கு பழுதுகளை நீக்கும் பணிக்கு உரிய மெக்கானிக்கு கள் இல்லை. அடுத்து தேவையான உதரிபாகங்கள் இருப்பு இருப்ப தில்லை. இதனால் ஏராளமான வாக னங்கள் பழுது நீக்கப்படாமல் தேங்கி நிற்கிறது. வாடிக்கையாளர்கள் உரிய காலத்தில் பழுது நீக்கப்படாததால் வேதனையுடன் திரும்பிச் செல்கின்ற னர். ஒரு சிலர் கடுமையாக திட்டிவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வர் நிறுவனத்தின் கேட்டை இழுத்து சாத்தி விட்டு சென்ற நிகழ்வும் நடந்தே றியுள்ளது. காற்று மாசை குறைக்க மின் வாகனத்தை வாங்கி பயன்படுத்த ஆசைப்பட்ட பலர், இன்று இந்நிறு வனத்தின் முறையற்ற நடவடிக்கை யால் வேதனையடைந்துள்ளனர். அரசு மானியம் வழங்கியும் நோக்கம் நிறைவேறாமல் கேள்விக்குறியாகி யுள்ளது.</p>
