சீரமைப்பு பணி முடிந்து 40 நாட்களுக்கு பின் கம்பம்மெட்டு மலைச்சாலை திறப்பு
18 Jul 2026, 9:23 pm
<p><strong>சீரமைப்பு பணி முடிந்து 40 நாட்களுக்கு பின் கம்பம்மெட்டு மலைச்சாலை திறப்பு</strong></p><p>தேனி, ஜூலை 18- கம்பம் மெட்டு மலைச்சாலையில் நடை பெற்ற சீரமைப்பு பணி முடிந்து, 40 நாட்க ளுக்கு பின் மலைச் சாலை திறக்கப்பட்டது. கம்பம்-கம்பம் மெட்டு மலைச்சாலை தமிழகத்தை கேரளத்துடன் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் 6 கிமீ தூரம் மலைச்சாலை யாக அமைந்துள்ளது. இந்நிலையில் கிணத்து வளைவு எனும் இடத்தில் 65 மீ. நீளத்துக்கு சிமென்ட் தளம் அமைத்து, சாலையின் இருபுறமும் வடிகால் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் ஒரு மாதத்துக்கு மேலாக மலைப்பாதை மூடப்பட்டிருந்தது. இந் நிலையில் பராமரிப்புப் பணிகள் முடிந்த நிலையில் வாகன பயன்பாட்டுக்காக சனிக் கிழமை திறக்கப்பட்டது. கம்பம் எம்எல்ஏ ஜெகநாத்மிஸ்ரா கொடியசைத்து திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறி யாளர் குமணன், உத்தமபாளையம் கோட்ட பொறியாளர் இளம்பூரணம், உதவி பொறி யாளர் வயிரக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகை யில், தற்போது பேருந்து, இலகுரக வாக னங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. டிப்பர் லாரிகள் 20 நாட்களுக் குப் பிறகே அனுமதிக்கப்படும் என்றனர்.</p>
