கம்பத்தில் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூல் கலந்துரையாடல்
31 May 2026, 10:07 pm
<p><strong>கம்பத்தில் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூல் கலந்துரையாடல்</strong></p><p>தேனி, மே 31- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற “கம்பம் சந்திப்பு” நிகழ்வின் 30-வது அமர்வில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ்ச் சிறுகதையின் தடங் கள்’ நூல் குறித்து கலந்துரை யாடல் நடைபெற்றது. சனிக்கிழமை நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். கம்பம் கிளை பொருளாளர் லாவண்யா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ச.தமிழ்ச்செல்வ னின் ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலை மையமா கக் கொண்டு பல்வேறு படை ப்பாளிகள் மற்றும் இலக்கி யப் போக்குகள் குறித்து பங்கேற்பாளர்கள் கருத்துப் பகிர்வு மேற்கொண்டனர். திராவிட இயக்கப் படைப்பாளிகள் குறித்து திலீ பன், பெண் படைப்பாளி கள் குறித்து ஆபிதா பர்வீன் மற்றும் கவிதா, சுந்தர ராம சாமி குறித்து முத்துக்கண் ணன், கந்தர்வன் குறித்து லட்சுமணகுமார், இன்குலாப் குறித்து மணியரசன், நாஞ் சில் நாடன் குறித்து வெங்கட்ராமன், ஜானகி ராமன் குறித்து முரளி ஆகி யோர் தங்களது கருத்துக் களை பகிர்ந்து கொண்ட னர். நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீராமன் சிறப்பாக ஒருங்கி ணைத்தார். முடிவில் மாவட் டச் செயலாளர் ஶ்ரீதர் நன்றி கூறினார்.</p>
