கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு முகாம்
14 Jun 2026, 11:43 pm
<p><strong>கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு முகாம்</strong></p><p>தேனி, ஜூன் 14- கம்பம் புதிய பேருந்து நிலையத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் சிங்கப்பெண் அதி ரடிப்படை சார்பில் விழிப்புணர்வு முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதி ரடிப்படை குழுவினர் பேருந்து நிலை யத்தில் இருந்த பயணிகள், பெண்கள், ஆட்டோ டிரைவர்கள், பேருந்து டிரைவர் கள் மற்றும் கடைக்காரர்களிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினர். பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள் வது, எவ்வாறு தகவல் தெரிவிக்க வேண் டும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல் பாடுகள், அவர்கள் எவ்வாறு பொது மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்று வார்கள் என்பது குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களிடம் பெண் பயணி களின் பாதுகாப்பில் தங்களின் பொறுப்பான பங்களிப்பை உறுதி செய்யுமாறு அதிர டிப்படை குழுவினர் கேட்டுக் கொண்டனர்.</p>
