கியூட் தேர்விலும் குளறுபடி!
30 May 2026, 8:41 pm

கியூட் தேர்விலும் குளறுபடி!

சென்னை, மே 30- நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான பொது நுழை வுத் தேர்வினை (CUET - க்யூட்) தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கியூட் தேர்வு மே 11 முதல் 31 வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. பக்ரீத் அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, சனியன்று (மே 30) கியூட் தேர்வுகள் தொடங்கின.

ஆனால், குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் வினாத் தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறான வினாத்தாள்களை வழங்கியது, மாணவர்களின் வருகைப் பதிவு சரிபார்ப்பதில் ஏற்பட்ட தாமதம், சர்வர் முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்க விருந்த இரண்டாம் ஷிப்ட் தேர்வை தேசிய தேர்வு முகமை மாலை 4 மணிக்கு மாற்றியமைத்தது. தேர்வு மையங்களுக்கு வெளியே வெயிலில் காத்திருந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இந்த தாம தத்தால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்தனர்.