முந்தய பக்கம்

கடற்கரையில் இளைஞர் கொன்று புதைப்பு இருவர் கைது

30 Oct 2026, 11:39 pm
கடற்கரையில் இளைஞர் கொன்று புதைப்பு இருவர் கைது

கடற்கரையில் இளைஞர் கொன்று புதைப்பு இருவர் கைது

கடலூர், அக்.30-கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் மாயமான வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த இருவரை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) – எழில்செல்வி தம்பதியின் மகன் பிரசாந்த் (19). டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது தாயார் எழில்செல்வி, சென்னையில் நடிகர் சரத்குமார் – ராதிகா வீட்டில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்கச் செல்வ

தாகக் கூறிவிட்டுச் சென்ற பிரசாந்த், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் கோபுரத் தகவல்களின் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பிரசாந்துக்கும் அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அவரைப் பொன்னேரி கடற்கரைப் பகுதிக்கு வரவழைத்துத் தாக்கி கொன்று புதைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram