மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.132.15 கோடி கடனுதவி
6 Nov 2026, 12:24 am

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.132.15 கோடி கடனுதவி

கடலூர், நவ.5-கடலூர் மாவட்டத்தில் 1,090 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.132.15 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.

கடலூர் நகர அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எல்.இ.ஜோதிமணி ஆகியோர் முன்னிலை யில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கி னார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 1,090 குழுக்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவி மூலம் 13,741 பேர் பயன்பெறுவர். மாவட்டத்தில் 15,646 ஊரக சுய உதவிக்குழுக்களில் 2,19,044 உறுப்பினர்களும், 4,543 நகர்ப்புற குழுக்களில் 63,602 உறுப்பினர்களும் உள்ளனர்.

2026–27 நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,543 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7,807 குழுக்களுக்கு ரூ.667.75 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,073 பேர் பயனடைந்துள்ளனர். விவசாயம் மற்றும் இதர தொழில்களை மேற்கொண்டு மகளிர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரு கின்றனர்.

மேலும், மகளிர் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன், வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் பிற துறைகளின் உதவிகள் மூலம் 50,338 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிஷன்குமார், மகளிர் திட்ட இயக்குநர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.