தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எங்களை விவசாயம் செய்ய விடுங்கள் ‘சிப்காட்’ கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

4 Nov 2026, 11:44 pm
எங்களை விவசாயம் செய்ய விடுங்கள் ‘சிப்காட்’ கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

எங்களை விவசாயம் செய்ய விடுங்கள் ‘சிப்காட்’ கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

கடலூர், நவ.4-கடலூர் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்க அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, “எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்; விவசாயம் செய்ய அரசு அனுமதித்தால் போதும்” என்று மாவட்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கிராமப் பெண்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சிப்காட் விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி கடற்கரையிலும் போராட்டம் நடத்தினர்.

சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்த மக்கள், மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, சிப்காட் விரிவாக்கத்துக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களது விவசாய நிலங்களைப் பாதுகாக்க எந்தப் போராட்டத்தையும் நடத்தத் தயார் என்றும் கிராம மக்கள் முழக்கமிட்டனர். “எங்களுக்குத் தேவை விவசாயம்தான்; எங்கள் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று பெண்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், அரசு மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்றும், அரசாணையை ரத்து செய்வது அல்லது நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் நில எடுப்பு சிறப்பு மாவட்ட அலுவலர் முத்து மீனாட்சி, வட்டாட்சியர் ராஜேஷ் பாபு, தனி வட்டாட்சியர் சத்யன் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.