தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

14 Jul 2026, 1:13 am
தியில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு
<p><strong>சவூதியில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு</strong> </p><p>கடலூர், ஜூலை 13- சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் உயிரிழந்தவரின் மனைவி கண்ணீருடன் மனு அளித்தார். கடலூர் மாவட்டம், வெண்கரும்பூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த ஓராண்டாகச் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் தற்போது சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் உள்ள கிங் காலித் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி ரேகா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “எங்கள் குடும்பம் வறுமையில் இருப்பதால், கணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான செலவை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளேன். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதில் தலையிட்டு, உடலைச் சொந்த ஊருக்கு மீட்டுத் தந்து, உரிய முறையில் நல்லடக்கம் செய்ய உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த ஈஸ்வரனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் உடனடி உதவியை உறவினர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.