குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் அவதி
18 Aug 2026, 11:16 pm

குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் அவதி

கடலூர், ஆக.18 -திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து, அதிலிருந்து வெளியேறும் குடிநீர் கழிவுநீர் கால்வாயில் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி, அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடியிருப்புகளின் அருகே கழிவுநீர் செல்வதால் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீருடன் குடிநீர் கலக்கும் அபாயம் இருப்பதால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழலும் உருவாகியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, உடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பதுடன், கழிவுநீர் கால்வாயையும் சுத்தம் செய்து தடையின்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் மாசுபடாமல் பாதுகாக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை சாலையில் ரயில்வே கேட்டு அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்