மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம்!
17 Jun 2026, 11:27 pm
<p><strong>மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம்!</strong></p><p>கடலூர், ஜூன் 17- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில் பெய்த மழை யால் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவ டைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந் தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கியுள்ளது. விருத்தா சலம் நகரப் பகுதியில் மழைநீர் பெய்து அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் வழியாக ஆலிச்சிக்குடி சாலை அருகே அமைந்துள்ள வாய்க்காலில் சென்று வெளி யேறுவது வழக்கம். ஆனால், ஆலிச்சிக்குடி அருகே உள்ள வாய்க்கால் நீண்ட நாள்க ளாக, தூர்வாரப்படாததால் சம்பு உள்ளிட்ட நீர்த் தாவரங்கள் அடர்த்தியாக வளர்ந்த துடன், குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி யுள்ளன. இதன் காரணமாக விருத்தாசலத்தில் மூன்று நாள்களாக பெய்த மழையில், நீர் தடையின்றி வெளியேற முடியாமல் வாய்க்கால் அருகே உள்ள சுமார் 20 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தேங்கியது. கடந்த இரண்டு நாள்களாக நீர் தேங்கி நிற்பதால் சுமார் 5 ஏக்கர் பரப்பள வில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நிலத்திலேயே சாய்ந்து சேத மடைந்துள்ளன. மேலும், தண்ணீரில் மூழ்கி யிருந்த சில நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியாக விவசாயிகள் பெட்ரோல் இன்ஜின்கள் மூலம் வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பயிர் சேதத்தைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியது. இரவு, பகல் பாராமல் நீர்ப்பாசனம் செய்து, அதிக செலவில் நெல் சாகுபடி செய்தோம். கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நகரப் பகுதியில் இருந்து வெளி யேறிய மழைநீர் எங்கள் விளைநிலங்க ளுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி யுள்ளது. வாய்க்கால்களை நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே தூர்வாரியிருந்தால் இந்த பாதிப்பைத் தவிர்த்திருக்க முடியும். ஏக்கருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது பெரும் இழப்பைச் சந்தித்துள் ளோம். எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்க ளில் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி சேத மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
