தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

yesterday
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
<p><strong>குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்</strong></p><p>​​​​​​​கடலூர், ஜூன் 22 - கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு புதுப்பாளையம் பகுதி யில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் வரும் தண்ணீர் கழிவுநீர் போன்று நிறமாறி வருவதால், அதைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சி யரிடம் தங்களது கோரிக்கை மனுவை முறையாக அளிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்துவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர். இப்போராட்ட த்தினால் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.