ஜூலை 31-க்குள் வீடுகளைக் கட்டி முடிக்க அதிகாரிகள் உறுதி பழங்குடி மக்கள் நலச் சங்கப் போராட்டம் ஒத்திவைப்பு
17 Jul 2026, 12:30 am
<p><strong>ஜூலை 31-க்குள் வீடுகளைக் கட்டி முடிக்க அதிகாரிகள் உறுதி பழங்குடி மக்கள் நலச் சங்கப் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p><p>கடலூர், ஜூலை 16– கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியத்திற் குட்பட்ட ஊத்தாங்கால் ஊராட்சியில், பிரதமர் ஜன் மன் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி, பழங்குடி மக்கள் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2023–24ஆம் ஆண்டில் நான்கு பழங்குடியின பயனாளி களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், பணிகள் இது வரை முடிக்கப்பததைக் கண்டித்தும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட திட்ட இயக்குநர் அலுவலகத்தில் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட திட்ட முகமையின் துணைத் திட்ட இயக்குநர் ஜானகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், ஜூலை 31-க்குள் வீடுகளைக் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதையடுத்து போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் சங்க மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர். கலைச்செல்வன், ஜி.சண்முகம், கே. வெங்க டேசன், வி. அம்சவல்லி, அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
