முந்தய பக்கம்

கடலூரில் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

17 Jul 2026, 12:26 am
கடலூரில் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>கடலூரில் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கடலூர், ஜூலை 16– கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய ரூ.3,637 கோடி அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், 2003 ஏப்ரல் 1-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், வாரிசு வேலைவாய்ப்பு, ஓய்வு காலப் பலன்களை உடனடியாக வழங்கல், போக்குவரத்துத் துறையின் கணக்கு மற்றும் பிஎஃப் பிரிவுகளைக் கடலூரில் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் எம்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் ஜி.பாஸ்கரன், துணைத் தலைவர்கள் எஸ்.ஆறுமுகம், ராமமூர்த்தி, துணைச் செயலாளர்கள் ஆர்.பழனிவேலு, கே.விஸ்வநாதன், எ.தேவராஜூலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் எஸ்.ராமமூர்த்தி, பி.முருகன், எம்.அரும்பாலன், பி.கண்ணன் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் டி.புருஷோத்தமன், ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram