தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயனற்ற பொருள்களில் கலைப் படைப்புகள் கடலூரில் ஆசிரியர்களின் அசத்தல் கண்காட்சி

1 Nov 2026, 1:40 am
பயனற்ற பொருள்களில் கலைப் படைப்புகள்  கடலூரில் ஆசிரியர்களின் அசத்தல் கண்காட்சி

பயனற்ற பொருள்களில் கலைப் படைப்புகள் கடலூரில் ஆசிரியர்களின் அசத்தல் கண்காட்சி

கடலூர், அக். 31-கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில், கழிவுப்பொருள்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் மற்றும் பழங்கால அரிய பொருள்கள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவியும், விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியையுமான என்.கே. ஹேமலதா, பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். இவரது புதுமையான பணியைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இக்கண்காட்சியில் ஆசிரியை ஹேமலதா உருவாக்கிய வீணை, மிருதங்கம், கிட்டார் உள்ளிட்ட இசைக்கருவிக ளின் மாதிரிகள், சிப்பிகள் மற்றும் சங்குக ளால் ஆன பொம்மைகள், விழிப்புணர்வுச் சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. இவற்றை வெறும் காட்சிப் பொருள்களாக மட்டுமின்றி, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல்-கற்பித்தல் கருவி களாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார். மேலும், சுதந்திரத்துக்குப் பிந்தைய மற்றும் பிரிட்டிஷ் காலத்து நாணயங்கள், சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கலைப் பொருள்கள் போன்றவையும் இவரது சேகரிப்பில் இடம்பெற்றிருந்தன.

இவருடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வரலாற்று ஆசிரியர் கே. விஜய் பாஸ்கர் சேகரித்த அரிய பொருள்களும் இக்கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சங்க காலத்தைச் சேர்ந்த மணிகள், கற்கருவிகள், சுடுமண் பொம்மைகள், ஓலைச்சுவடி கள், எழுத்தாணிகள், பல்வேறு காலகட்டங் களைச் சேர்ந்த சுமார் 1,500 தீப்பெட்டிகள், 1947 முதல் வெளியிடப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு வங்கி டோக்கன்கள், 200 வகையான ஏடிஎம் அட்டைகள், நினைவு நாணயங்கள் மற்றும் பழைய பேருந்து பயணச்சீட்டுகளும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

புனித அண்ணார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவிகளும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் பார்வையிட்டுப் பயன்பெற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சகோதரி அமலோர்பவம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

இதுகுறித்து ஆசிரியை என்.கே. ஹேமலதா கூறுகையில், "பயன்பாடற்ற பொருள்களைத் தூக்கி எறியாமல், அவற்றில் உள்ள கலைநயத்தைப் புரிந்து புதிய பொருள்களை உருவாக்கலாம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுவதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் மாணவர்களிடம் படைப்பாற்றல், கைவினைத் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி குறித்த சிந்தனையை வளர்க்க முடிகிறது" என்று தெரிவித்தார். பல்வேறு பள்ளிகளுக்கு இத்தகைய கண்காட்சிகளை எடுத்துச் சென்று மாணவர்களிடம் கலை மற்றும் வரலாற்றின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.