தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடைகால கிரிக்கெட் பயிற்சி 180 மாணவர்களுக்கு சான்றிதழ்

22 May 2026, 1:33 am
கோடைகால கிரிக்கெட் பயிற்சி 180 மாணவர்களுக்கு சான்றிதழ்
<p><strong>கோடைகால கிரிக்கெட் பயிற்சி 180 மாணவர்களுக்கு சான்றிதழ்</strong> </p><p> கடலூர், மே 21- கடலூரில் மே 1 தொடங்கி நடைபெற்று வந்த கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி நிறைவுப் பெற்றதையடுத்து, 180 மாணவர்களுக்கு சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கடலூரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து கோடைக்கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சியை நடத்தியது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 180 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் தலைமையில், பயிற்சியாளர்கள் மகேஷ், மகேந்திரன், கவின், பாபு மற்றும் சிதம்பரம் ஆகியோர் மாணவர்களுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்கள், உடற்திறன் மேம்பாடு, அணிச் செயல்பாடு மற்றும் போட்டித் திறன்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர். பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதில் பங்கேற்ற 180 மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கூத்தரசன் ஆகியோர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பேசியது விளையாட்டு என்பது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், தன்னம்பிக்கை, நேர மேலாண்மை மற்றும் குழு ஒருங்கிணைப்பு போன்ற பண்புகளையும் வளர்க்கிறது. மேலும், இளம் தலைமுறையினரை கைப்பேசி மற்றும் இணைய அடிமைத்தனத்திலிருந்து விலக்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் முக்கிய கருவியாக விளையாட்டு திகழ்கிறது.கோடைக்கால பயிற்சி முகாம் மூலம் மாணவர்களின் விளையாட்டு திறன்கள் மேலும் மேம்பட்டு, எதிர்காலத்தில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.