கடலூர் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கடற்கரையோரம் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்
1 Nov 2026, 1:41 am

கடலூர் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கடற்கரையோரம் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

கடலூர், அக்.31-கடலூர் மாவட்டம் நச்சுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவருவதைக் கண்டித்தும், அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தை யும் அழிக்கும் வகையிலான ‘கடலூர் சிப்காட்’ விரி வாக்கத் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி யும், பொதுமக்களின் பெரும் மனித சங்கிலிப் போராட்டம் சனிக்கிழமை கடற்கரையோரம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு

கடலூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ளபகுதிகள் ஏற்கனவேபல்வேறு தொழிற்சாலை களின் கழிவுகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், புதிய சிப்காட் விரிவாக்கத் திட்ட மானது இப்பகுதியை முழுமையான நச்சுக் காடாகமாற்றிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற னர்.தொடர் எதிர்ப்பு களுக்கிடையேயும் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும்,தங்களின் வலுவான எதிர்ப்பை தமிழக அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லும்நோக்கிலும் இந்தஅடையாள அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

கரையோரம் அணிவகுத்த கிராம மக்கள்

‘கடலூர் சிப்காட் விரி வாக்க எதிர்ப்பு போராட்டக் குழு’ ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டம், சொத்திக்குப்பம் முதல் நஞ்சலிங்கம் பேட்டை வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் கடற்கரை ஓரமாக மிக நீளமான மனித சங்கிலியாக அமைந்தது.இதில் தியாகவல்லி ஊராட்சி, குடிகாடு ஊராட்சி, நொச்சிக்காடு, நந்தன் நகர், வள்ளலார் நகர், நடுத்திட்டு, அம்பேத்கர் நகர், பெரியார் நகர், லெனின் நகர், நஞ்ச லிங்கம் பேட்டை, நாயக்கர் பேட்டை, தம்மனம்பேட்டை, சித்திரப்பேட்டை, திருச்சோபுரம், பெரியகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். பெரி யவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும்பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து நின்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.மனித சங்கிலியில் பங்கேற்ற பொதுமக்கள் பதாகைகளை ஏந்திய வாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் தங்கள்எதிர்ப்பைப் பதிவு செய்த னர்.

அமைதியான முறை யில் நடந்த இந்த அறவழிப் போராட்டம், சிப்காட் விரி வாக்கத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்க ளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்யும் நிகழ்வாக அமைந்தது. மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டக் குழுவினர்வலியுறுத்தியுள்ளனர். இந்த மனித சங்கிலியில் கிராமமக்களோடு மார்க்சிஸ்ட்கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாத வன், தமிழ்நாடு விவசாயசங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், ஒன்றியசெய லாளர் கலை வாணன், மீன்பிடி தொழிலாளர்சங்கத்தின் வைத்திய லிங்கம், பாமக மாவட்டசெயலாளர் சன். முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோ ரும் கலந்து கொண்டனர்.