முந்தய பக்கம்

கோடை வெயில்: கடலூரில் கடலில் மகிழ்ந்த பொதுமக்கள்

25 May 2026, 2:28 am
கோடை வெயில்: கடலூரில் கடலில் மகிழ்ந்த பொதுமக்கள்
<p><strong>கோடை வெயில்: கடலூரில் கடலில் மகிழ்ந்த பொதுமக்கள்</strong></p><p>கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கமும், உஷ்ணமும் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கொளுத்துகின்ற கத்தரி வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடலில் ஏராளமான சிறுவர்களும், பொதுமக்களும் குடும்பத்துடன் குவிந்தனர். அங்கு அவர்கள் கடல் அலையில் நீந்தியும், நீராடியும் விளையாடிக் கோடை வெயிலை மகிழ்ச்சியோடு தணித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram