முந்தய பக்கம்

அனலை தணிக்க வெள்ளி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்!

8 Jun 2026, 11:18 pm
அனலை தணிக்க வெள்ளி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்!
<p><strong>அனலை தணிக்க வெள்ளி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்!</strong></p><p>தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகி வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலேயே அதிகபட்சமாகக் கடலூரில் 105.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகிக் கொளுத்தியுள்ளது. இதனால் நகர் முழுவதும் கடுமையான அனல் காற்று வீசியது. இந்த அனல் காற்றில் இருந்தும், கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் மாலை நேரத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் குவிந்தனர். அங்கு வந்திருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் குளித்தும், கடற்கரை குளிர்ந்த காற்றை வாங்கியும் தங்களது உடல் வெப்பத்தைத் தணித்துக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram