தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட்டார போக்குவரத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை கடலூரில் பொதுமக்கள் அவதி

yesterday
வட்டார போக்குவரத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை கடலூரில் பொதுமக்கள் அவதி

வட்டார போக்குவரத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை கடலூரில் பொதுமக்கள் அவதி

கடலூர், ஆக.26-மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலு வலகம் கடந்த 3 ஆண்டுகளாக நிரந்தர வட்டார போக்குவரத்து அலுவலர் இன்றி செயல்பட்டு வருவதால், பொது மக்கள் பல்வேறு சேவைகளைப் பெற அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் கேப்பர் மலையில் செயல்படும் இந்த அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிட மும், 4 மோட்டார் வாகன ஆய்வாளர் பணி யிடங்களும் உள்ளன. நாள்தோறும் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்றிதழ், அனுமதிச்சீட்டு, சாலை வரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 200 பேர் வந்து செல்கின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நிரந்தர வட்டார போக்குவரத்து அலு வலர் இல்லாததால், சிதம்பரம் வட்டார போக்கு வரத்து அலுவலர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டுமே கடலூர் அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்கிறார்.

4 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், நீண்ட காலமாக ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். சமீபத்தில் மேலும் ஒருவர் நியமிக்கப்பட்டாலும், அவர் பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பெருமளவில் தேங்கியுள்ளன.

பொதுமக்கள் தவிப்பு

ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், புதிய வாகனப் பதிவு, ஆர்.சி. விவரங்கள், வாகன தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, நகல் உரிமம், முகவரி மற்றும் பெயர் மாற்றம், தடையில்லா சான்று, சாலை வரி, பசுமை வரி உள்ளிட்ட பணிகளுக்காக வருபவர்கள் உரிய அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக தகுதிச்சான்று மற்றும் அனு மதிச்சீட்டு பெறுவதற்காக சிதம்பரத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலு வலர் எப்போது வருவார், எப்போது கையெழுத்திடுவார் என காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கும் வகையில், நிரந்தர வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.