தென்பெண்ணையாற்றில் முழுமையான அணை கட்ட வேண்டும் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்
13 Jul 2026, 12:31 am
<p><strong>தென்பெண்ணையாற்றில் முழுமையான அணை கட்ட வேண்டும் குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>கடலூர், ஜூலை 12- கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளரிடம் வடி கால் வசதிகளை மேம்படுத்தவும், தென்பெண்ணையாற்றில் முழுமையான வெள்ளத் தடுப்பு அணை அமைக்கவும் கோரி மனு அளிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், பொருளாளர் பி.கே.வி.வெங்கட்ரமணி, தலைமையில் நிர்வாகிகள் மனுவை வழங்கினர். ரூ.29 கோடி மதிப்பிலான சின்ன வாய்க்கால் வடிகால் திட்டத்தை தரமாக நிறைவேற்றுதல், கெடிலம் ஆற்றை தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல், மாசிலாமணி நகரில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், 2023 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கண்டகாடு, தாழங்குடா பகுதிகளை பாதுகாக்க தென்பெண்ணையாற்றில் முழுமையான அணை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
