தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு பயணிகள் அவதி
6 Jul 2026, 11:36 pm
<p><strong>தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு பயணிகள் அவதி</strong></p><p>கடலூர், ஜூலை 6- கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தனி யார் பேருந்துகளில், அரசு அனுமதி இன்றி பயணக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவ திக்குள்ளாகியுள்ளனர். குவிந்த புகார்கள் கடந்த ஒரு வாரமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து களில் பயண தூரத்திற்கு ஏற்ப, குறைந்த பட்சம் ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.7 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசின் முறையான அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சை யான கட்டண உயர்வால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். பழைய கட்டண முறையிலேயே பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சியர் கடும் எச்சரிக்கை இது குறித்துக் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கேட்டபோது, "தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருந்தது. அதில், சில பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் துறை சார்ந்த அலு வலர் தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது" என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில், அரசு அனுமதியின்றி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும், ஏற்கெனவே உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உரிமையாளர்களுக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தப்படும். கூட்டத்திற்குப் பிறகும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட பேருந்துகள் மீது அபராதம் விதிப்பதோடு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.</p>
