தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூர் துறைமுக விரிவாக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு வழங்கக் கோரிக்கை'

9 Jul 2026, 11:14 pm
கடலூர் துறைமுக விரிவாக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில்  80 விழுக்காடு வழங்கக் கோரிக்கை'
<p><strong>கடலூர் துறைமுக விரிவாக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு வழங்கக் கோரிக்கை&#39;</strong></p><p>கடலூர், ஜூலை 9 – கடலூர் துறைமுகத்தில், ‘மகதி கடலூர் போர்ட் அண்டு மேரிடைம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில், 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுக விரிவாக்கம், கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் மையம் அமைப்பது தொடர்பான பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள், மீனவர்கள் மற்றும் இளை ஞர்கள், இத்திட்டத்தால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், இத்திட்டத்தால் உருவாகும் வேலை வாய்ப்புகளில் குறைந்தது 80 சதவீதத்தை உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கோரிக்கைகள் துறைமுகத்தில் நிலக்கரி கையாள அனுமதிக்கக் கூடாது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளைக் கையகப்படுத்தக் கூடாது. பெரிய கப்பல்கள் வருகை குறித்து மீனவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். மீன்பிடி உபகரணங்கள் ஏதேனும் சேத மடைந்தால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இக்கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து பொதுமக்களுக்குப் போதிய முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய மக்கள், ஏற்கெனவே சிப்காட் உள்ளிட்ட திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை யில் போதிய வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பில் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறி, கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதி மக்களும் மீனவர்களும் பாதியிலேயே வெளி யேறினர். இறுதியில், திட்டம் தொடர்பான தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சே பனைகளை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனுவாக அளிக்கலாம் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.