பாலியல் புகார் அளித்த மாணவியிடம் வரம்பு மீறி பேசிய கல்லூரி உள்புகார் கமிட்டி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
6 Oct 2026, 1:25 am

பாலியல் புகார் அளித்த மாணவியிடம் வரம்பு மீறி பேசிய கல்லூரி உள்புகார் கமிட்டி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

கடலூர், அக்.5-கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை கவுரவ விரிவுரையாளர் மீது பாலி யல் தொந்தரவு புகார் அளித்த மாணவியிடம், கல்லூரி உள்புகார் கமிட்டி விசாரணையின்போது வரம்பு மீறி, மிரட்டும் வகை யில் பேசி உள்ளனர்.புகார் அளித்த 10 நாட்களுக்குப் பிறகேவிசாரணை நடைபெற்றதாக வும், நீண்ட நாட்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் தேவ னாம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மரியாதைக் குறைவாகவும், மிரட்டும் வகையிலும் பேசி உள்ளார். மேலும் மாணவர் சங்கத் தலைவரை ஒருமையில் பேசி மிரட்டிய வீடியோவும் வைரலாகி உள்ளது.போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்க தலைவர் கனிஷ்கரைகல்லூரி நிர்வாகம் 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது.இந்நிலையில், உட்புகார் கமிட்டியைக் கலைத்து புதிய கமிட்டி அமைக்க வேண்டும், மாணவியிடம் அநாகரிகமாகப் பேசிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து மாவட்டஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாணவர் சங்க நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்று, பிரச்சனை களுக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் முழக்கமிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் மாவட்டத் தலைவர் பூபதி, மாவட்டச் செயலாளர் சௌமியா, மாநிலக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட இணைச் செய லாளர்கள் சிவநந்தினி, சிவன்ராஜ், செங்கதிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கனிஷ்கர், அன்பு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் விமல், கனிமொழி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சின்னத்தம்பி, மாவட்டப் பொருளாளர் கலைவாணன், ஒன்றியத் தலைவர் ஞானபிரகாஷ், ஒன்றியப் பொருளாளர் பரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.