முறையாக நடக்காத குளம் சீரமைப்பு பணி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
28 Oct 2026, 1:19 am

முறையாக நடக்காத குளம் சீரமைப்பு பணி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூர் அக்.27-கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் குளத்தைச் சுற்றி ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வந்த கரை அமைத்தல், நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி களிடமும் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்தபோதிலும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த பாதிரிக்குப்பம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபடுவதற்காக கோயில் பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார், கடலூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, திரு

வந்திபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்களது அதிருப்தியைத் தெரி வித்ததுடன், பணிகளில் உள்ள குறை பாடுகளையும் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, பணிகள் தற்காலிக மாக நிறுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நட வடிக்கை மேற்கொண்ட பின்னர் பணிகள் தொடரும் என்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திரௌபதியம்மன் கோயில் குளத்தின் கரையைச் சுற்றி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்கள் பதிக்கப்பட்டன. அவை ஓராண்டுக்குப் பிறகு பெய்த மழையில் சரிந்து குளத்துக்குள் விழுந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் குளக்கரை மற்றும் நடை பாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் தரமற்ற முறை யில் மேற்கொள்ளப்படுவது ஏற்கத்தக் ததல்ல.

எனவே, பணிகளின் தரத்தை அதி காரிகள் முறையாக ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொண்ட பின்னரே தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.