தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி

12 hours before
50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி

50 ஆண்டுகளாக பட்டா வழங்காத அவலம் 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க சிபிஎம் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி

கடலூர், செப்.18-கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரம் திருக்கண்டீஸ்வரம் 12-வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் கோட்டாட்சியர் மூலம் இலவச மனை வழங்கப்பட்டு,நமூனாமட்டுமே வழங்கப் பட்டுள்ளது. இது வரை இ-பட்டா வழங்கப்படாத நிலையில், உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களுடன் இணைந்து பண்ருட்டி வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (செப்.18) மனு அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்ற வட்டாட்சியர், ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். காலக்கெடுவுக்குள் நட வடிக்கை எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சி நாதன், பகுதி குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.