தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசாரணையின்றி ஊழியர் பணியிடை நீக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்

21 Jul 2026, 12:01 am
விசாரணையின்றி ஊழியர் பணியிடை நீக்கம்  நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
<p><strong>விசாரணையின்றி ஊழியர் பணியிடை நீக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்</strong></p><p>கடலூர், ஜூலை 20– எவ்வித விசாரணையும் நடத்தாமல் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழி யரைப் பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் திங்கள் கிழமை மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்து, கடலூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் விவ சாயிகளிடம் தொலைபேசியில் பேசிய போது, ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.50 வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த, அந்த நிலையத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன் என்ற ஊழியரைச் சம்பவ இடத்திலேயே பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள், எவ்வித விசாரணையும் இன்றிப் பழிவாங்கும் நோக்கில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர். மேலும், கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 122 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் பணிகளைப் புறக்கணித்து முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, கடலூர் செம்மண்டலம் அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக நுழைவாயிலில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.