முந்தய பக்கம்

கடலூரில் கொள்முதல் செய்யப்பட்ட50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

5 Oct 2026, 1:09 am
கடலூரில் கொள்முதல் செய்யப்பட்ட50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

கடலூரில் கொள்முதல் செய்யப்பட்ட50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

கடலூர் அக். 4-கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆடூர் அகரம், கொளக்குடி, கருங்குழி, பெரியகண்ணாடி, பள்ளிநீரோடை, ரெட்டிப்பாளையம் ஆகிய நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லைகொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் திறந்தவெளியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து முளைப்பு, நிறமாற்றம் மற்றும்தரம் குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது விளைபொருளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram