அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை!
28 Oct 2026, 1:20 am

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகள் வேதனை!

கடலூர், அக்.27-கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெரிய கண்ணாடி அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளன.குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய கண்ணாடி, கருங்குழி, கொளக்குடி, ஆடூர் அகரம், கொத்தவாச்சேரி, பள்ளிநீரோடை, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் முடிவடைந்து 15 நாட்களுக்கும் மேலாகியும், நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.

இதனால் பெரிய கண்ணாடி கிராமத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்

நனைந்து முளைத்துச் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் உழைப்பால் விளைந்த நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற கொள்முதல்நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருப்பதால், வடகிழக்குப் பருவமழைதொடரும் நிலையில் மேலும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கெனவே சேதமடைந்த நெல் மூட்டைகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.