முந்தய பக்கம்

கடலூரில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

9 Jul 2026, 10:50 pm
கடலூரில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>கடலூரில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p><p>கடலூர், ஜூலை 9 – தமிழ்நாடு அரசு அனைத்து செவிலி யர்கள் சங்கம் சார்பில், கடலூர் மாவட்ட சுகாதார அலுவலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமப்புறங்களில் பொதுமக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வரும் திறன்மேம்பாட்டு செவிலியர் பணி யிடங்கள் மற்றும் நிரந்தர செவிலியர் பணி யிடங்களை ‘மறுபணி அமர்வு’ செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்கி ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராமப்புற மக்களுக்கான மருத்துவச் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசையும் சுகாதாரத்துறையையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்ட னர். சங்கத்தின் தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜீவிதா முன்னிலை வகித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கடாஜலபதி, துணைத் தலைவர் எல்.ஹரிகிருஷ்ணன் மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram