சென்னை விரைவு செய்திகள்
4 hours before

டெங்கு காய்ச்சலுக்கு3 வயது குழந்தை பலி

கடலூர், நவ.14- விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.சின்ன கண்டியாங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மகள் யுவஸ்ரீ(3). கடந்த 11ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை,விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. எனினும், சனிக்கிழமை காலை 11 மணிய ளவில் குழந்தை உயிரிழந்தது.

மின்சாரம் பாய்ந்து கப்பல் பணியாளர் பலி

கடலூர், நவ.14-கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேச பெருமாளின் மகன் ராஜ்குமார் (28). கப்பலில் மரைன் இன்ஜி னியராகப் பணியாற்றி வந்த இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.இந்நிலையில், வீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக தண்ணீர் எடுக்க மின்மோட்டாரை இயக்கியபோது, மின்கசிவு காரணமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதை தொட்ட ராஜ்குமார் மீதும் மின்சாரம்பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உறவி னர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு 39 ஆயிரம் கோழிகள் அழிப்பு

கடலூர், நவ.14-கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, தியாகவல்லி, தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம், கட்டி யங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 11 கோழிப்பண்ணைகளில், 4 பண்ணைகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன. இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகவேல் தலை மையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை நாமக்கல் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.ஆய்வில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகளைப் பாதுகாப்பாக புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் பகுதி களில் உள்ள 5 பண்ணைகளில் இறந்த 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும், கடலூர் மத்திய சிறையில் இறந்த 5 ஆயிரம் கோழிகளும் பாதுகாப்பாக குழி தோண்டிப் புதைக்கப்பட்டன. மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கோழிகளை பாதுகாப்பாக அழிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

ஆற்றுப்பாலத்தின் அடியில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு

திருக்கோவிலூர், நவ.14-கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி துரிஞ்சலாறு ஆற்றுப்பாலத்தின் அடியில் பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வெள்ளியன்று (நவ.13 ) மீட்டனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த அடையாள அட்டை மூலம், உயிரிழந்தவர் முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறியல் துறையில் டியூட்டராக பணியாற்றி வந்த மருத்துவர் இரா.சரண்யா என்பது தெரியவந்தது.

திட்டக்குடியைச் சேர்ந்த இவர், தற்போது திருக்கோவிலூர் என்.ஜி.ஓ. நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.