கடலில் மாயமான 3 மீனவர்களை கண்டுபிடிக்க கோரி ஆட்சியரிடம் மனு
yesterday
<p><strong>கடலில் மாயமான 3 மீனவர்களை கண்டுபிடிக்க கோரி ஆட்சியரிடம் மனு</strong></p><p>கடலூர், ஜூன் 22 - கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை யைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மாய மானதைத் தொடர்ந்து, அவர்களை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (56), சோனகங் சாவடியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி யன் (56) ஆகிய மூவரும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி, அன்னங்கோவில் மீன்பிடித் தளத்திலிருந்து படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் கரைக்குத் திரும்ப வேண்டிய அவர்கள், இன்று வரை வீடு திரும்பவில்லை. கடந்த 7 நாட்களாக சக மீனவர்கள் தங்களது சொந்தப் படகுகள் மூலம் தேடியும், அவர்கள் குறித்த எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “மீன்வளத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி நடைபெறுவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், கடலுக்குச் சென்று தேடும் மீனவர்களின் தகவல்படி, இதுவரை எவ்வித வான்வழித் தேடுதல் பணியும் நடைபெறவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்களைக் கொண்டு மாயமான 3 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேடுதல் பணியின்போது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல வேண்டும்” என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
