கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆவேசம் நிர்வகிக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்! அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
6 Nov 2026, 12:35 am

கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆவேசம் நிர்வகிக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்! அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

கடலூர், நவ.5-கடலூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேயர் சுந்தரி ராஜா ஆவேசமாகப் பேசி னார்.

மாமன்ற கூட்டத்திற்கு மேயர் சுந்தரிராஜா தலைமை தாங்கினார். ஆணையாளர் கிஷன் குமார், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகி யோர் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கி யதும், மஞ்சக்குப்பத்தில் ரூ.5.3 கோடி மதிப்பீட்டில் 120 கடைகளுடன் கட்டப் பட்டுள்ள அண்ணா மார்க்கெட்டை உடனடி யாகத் திறக்க வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.கட்டுமானப் பணிகள் முடிந்து எட்டு மாதங்களா கியும் மார்க்கெட் திறக்கப் படாததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மாநக ராட்சிக்கு சுமார் ரூ.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். இதுதொடர்பாகத் தனித் தீர்மானமும் கொண்டு

வந்தார்.

தொடர்ந்து பேசிய மேயர், மாநகராட்சி அதி காரிகள் தனக்கு உரிய மரி யாதை அளிப்பதில்லை என்றும், தொலைபேசியில் தொடர்புகொண்டாலும் அழைப்புகளை ஏற்ப தில்லை என்றும் குற்றம்

சாட்டினார். மழைக்காலப் பாதிப்புகள் குறித்து கவுன்சி லர்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், பொதுமக்கள் தன்னிடமே கேள்வி கேட்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசமான நிலை யில் உள்ளது என்றார்.

தனது பதவிக்காலம் இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அதுவரை யாவது உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம் அவமதிக்கப் படுவதாக உணர்வதாகவும் வேதனை தெரிவித்தார்.

அண்ணா மார்க்கெட்டின் பெயரை காமராஜர் மார்க்கெட் என மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வருவதாகக் குறிப்பிட்ட அவர், அண்ணா யாருக்கு என்ன தீங்கு செய்தார்? எதற்காகப் பெயரை மாற்ற வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், உள்ளாட்சித் துறையைத் தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ள முதல மைச்சர், மாநகராட்சியில் நிலவும் மக்கள் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். கட்சி வேறுபாடு காரணமாக கவுன்சிலர்களின் கோரிக்கைகள் புறக் னணிக்கப்பட்டாலும், அவர்களுக்கு வாக்களித்த பொதுமக்களை ஏன் தண்டிக்க வேண்டும் என்றார்.

எந்தப் பிரச்சனை குறித்துக் கேட்டாலும் முதலமைச்சர் அலுவலகத்தி லிருந்தும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமிருந்தும் உரிய பதில் கிடைப்பதில்லை என ஆணையர் தெரி விக்கின்றார். துறையை நிர்வகிக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என்றும் ஆவேசமாகப் பேசி

னார். மரியாதை அளிக்கப்படாவிட்டால் அனைவரும் ராஜினாமா செய்துவிடுவோம் என்றும் எச்சரித்தார்.

இதற்குப் பதிலளித்த திமுக கவுன்சிலர் ராஜ்மோகன், “கேள்வி கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக உங்களிடம்தான் கேட்க முடியும். எங்களுக்கு நீங்கள்தான் தீர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருப்ப தால் கூட்டத்திலிருந்து புறப்படுவதாகவும், தனக்குப் பதிலாக துணை ஆணையாளர் பங்கேற்பார் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து, ஆணையாளர் இல்லாத நிலை யில், விரைவில் அடுத்த மாமன்றக் கூட்டம் நடத்தப்

படும் என மேயர் சுந்தரிராஜா அறிவித்து கூட்டத்தை முடித்தார்.