கண்காணிப்பு இல்லாமல் நடைபெறும்வடிகால் தூர்வாரும் பணியை நிறுத்திய மேயர்
23 Sept 2026, 1:21 am
<p><strong>கண்காணிப்பு இல்லாமல் நடைபெறும்வடிகால் தூர்வாரும் பணியை நிறுத்திய மேயர்</strong></p><p>கடலூர், செப்.22-கடலூர் மாநகராட்சி சுத்துக்குளம் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் சுந்தரி ராஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை, சேறு, சகதி ஆகியவை சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்ததுடன், பணிகளை கண்காணிக்க அதிகாரிகளும் இல்லாதது தெரியவந்தது.இதையடுத்து, அதிகாரிகள் நேரில் வந்து கண்காணிக்கும் வரை பணிகளை நிறுத்த மேயர் உத்தரவிட்டார்.வடிகால்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு மற்றும் தரத்தில் தூர்வாரப்படுவதுடன், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மாநகராட்சி மேயர் தொலைபேசியில் அதிகாரிகளை அழைக்கும் போது சரியான பதில் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.</p>
