கடலூர் மனுநீதி முகாமில் 1,513 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
22 Jul 2026, 11:36 pm
<p><strong>கடலூர் மனுநீதி முகாமில் 1,513 பேருக்கு நலத்திட்ட உதவிகள் </strong></p><p>கடலூர், ஜூலை 22- கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் 1,513 பயனாளிகளுக்கு ரூ.26.65 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இலவச வீட்டுமனைப் பட்டா, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், வேளாண் உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், கிராம வறுமை ஒழிப்பு நிதி மற்றும் புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் இவ்விழாவில் வழங்கப்பட்டன. முகாமில் பேசிய அமைச்சர், மக்களின் கோரிக்கைகளை அவர்களின் பகுதிகளிலேயே நேரடியாகப் பெற்றுத் தீர்வு காணும் வகையில்தான் மனுநீதி முகாம்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் போன்ற அரசு நிறுவனங்களின் கடன் திட்டங்களைப் பயன்படுத்தித் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றார். பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், போதைப் பழக்கத்தை ஒழிக்கவும், அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நலத்திட்ட கண்காட்சி அரங்குகளைப் பொதுமக்களும் பார்வையிட்டனர்.</p>
