கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
53 minutes before
<p><strong>கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கடலூர், செப்.23-கடலூர் மஞ்சை நகர் மைதானம் அருகே பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வணிக வளாகம் கட்டும்பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களில் வரி விதிப்பு மற்றும்திட்டக் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சல் நிலையம்அருகே புதன்கிழமை (செப்.23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர்எம்.மருதவாணன் தொடக்கி வைத்தார். பொதுச்செய லாளர் பி.வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கிப்பேசினார்.</p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செய லாளர் நாகராஜ், மக்கள் அதிகாரம் பாலு, அனைத்து பொதுநலஇயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, மீனவர் பேரவை மாவட்டச் செயலாளர் சுப்பராயன், பாமகநகர அமைப்பாளர் சரவணன், சட்ட உரிமைகள் பாதுகாப்புத் தலைவர் ராஜேஷ், குடியிருப்போர் கூட்டமைப்பு துணைத் தலைவர் ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செய லாளர் ஆர்.அமர்நாத்,காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாநில அமைப்புச் செயலாளரும், அனைத்து பொதுநல இயக்கங்களின்இணை ஒருங்கிணைப்பாளருமான திரு மார்பன் நிறைவுரையாற்றினார். துணைத் தலைவர் சண்முகம் நன்றிகூறினார்.</p>
