தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் புதிய ரவுண்டானாவை அகற்றக்கோரி இடதுசாரி கட்சிகள் காத்திருப்பு போராட்டம்

2 hours before
போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் புதிய ரவுண்டானாவை அகற்றக்கோரி இடதுசாரி கட்சிகள் காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் புதிய ரவுண்டானாவை அகற்றக்கோரி இடதுசாரி கட்சிகள் காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் புதிய ரவுண்டானாவை அகற்றக்கோரி சிபிஎம், சிபிஐ கட்சிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர், செப்.14-கடலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திருப்பா திரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் எதிரே உள்ள புதிய ரவுண்டானாவை உடனே அகற்ற வலி

யுறுத்தியும், மக்களின் வரிப்பணத்தில் வீண் செலவும், போக்குவரத்து குழப்பத்தை யும் ஏற்படுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கினை கண்டித்தும், கம்மியபேட்டை சாலையில் இருந்து சிதம்பரம் சாலைக்கு செல்ல நேரடி பாதையை உருவாக்க வலி யுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பாக ரவுண்டானா அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். சிபிஐ மாநகர செயலாளர் டி.நாகராஜ், மாநகர துணை செயலாளர் ஜி. மணிவண்ணன் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே. பகீரான், பி கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.துரை, உள்ளிட்ட இடதுசாரி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.