நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி
3 Sept 2026, 12:53 am
<p><strong>நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி</strong></p><p>கடலூர், செப். 2-கடலூர் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணா மலைக்கு மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கடலூர் நீதிமன்றம் எதிரில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>கடலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நுகர்வோர் நீதிமன்றம் கடலூரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும்; மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். நீதிமன்றம் மாற்றப்பட்டால் பொதுமக்கள், வழக்கு தாரர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி கடலூரி லேயே நீதிமன்றத்தை தொடர்ந்து செயல்படச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p>
