பணி நிறைவு பாராட்டு விழா
13 hours before

பணி நிறைவு பாராட்டு விழா

கடலூர், அக்.31-கடலூர் மாவட்ட தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையாளராக (அமலாக்கம்) பணியாற்றி வந்த ம.குமாரின் பணி நிறைவு பாராட்டு விழா கடலூரில் நடைபெற்றது.

தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு) ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தொழிலாளர் துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ராமதாஸ், ஜெரால்டு, கா.சாம்பசிவம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஜி.பழனி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் டி.புருசோத்தமன், தலைவர் ஆர். மனோகரன், மாவட்ட செயலாளர் என்.காசிநாதன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.அரி கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ராமதாஸ், குழந்தைவேலு, கல்யாண சுந்தரம், அய்யாசாமி, தண்டபாணி, ஏழுமலை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இராம.வெங்கடாஜ லபதி, செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். பணி ஓய்வு பெற்ற ம.குமார் ஏற்புரை வழங்கினார். குமாரின் துணைவியார் கௌரி சரஸ்வதி நன்றி கூறினார்.