கடலூர் குமார், ஆனந்தன் கனவை நிறைவேற்றுவோம்!
25 Jun 2026, 9:59 pm
<p><strong>கடலூர் குமார், ஆனந்தன் கனவை நிறைவேற்றுவோம்!</strong></p><p>1990களில் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கண்மணிகள் குமார், ஆனந்தன். இவர்களது போராட்டத்தால் கள்ளச்சாராய விற்பனைக்கு இடையூறு ஏற்பட்டதால் குமார், ஆனந்தன் மீது வன்மம் கொண்டது கள்ளச்சாராயக் கும்பல். காவல்துறையிலும் அந்த சமூகவிரோதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் இருந்தனர். ஏற்கெனவே 1998ஆம் ஆண்டு பட்டப்பகலில் வாலிபர் சங்கத் தோழர் கனகராஜ் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காத நிலையில் 1999 ஜுன் 26 அன்று கூலிப் பட்டாளத்தைக் கொண்டு இரவு நேரத்தில் இளைஞர்கள் குமார், ஆனந்தனை கொன்று பலி கொண்டனர். கள்ளச்சாராய சமூகவிரோதிகள். ஜுன் 26 ஐநா சபையால் போதைப் பொருள் எதிர்ப்புத் தினமாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வீரத் தியாகிகள் - பகத்சிங்கின் வாரிசுகள் குமார், ஆனந்தனின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்! போதையில்லா மாநிலமாக்க உறுதியேற்போம்!</p>
