தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

21 May 2026, 1:26 am
சென்னை விரைவு செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடலூரில் 94.22 சதவீதம் தேர்ச்சி

கடலூர், மே 20- தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 246 அரசு பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 147 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 439 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 214 மாணவர்கள், 15 ஆயிரத்து 386 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 600 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே எளிதாக அறிந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதிய 32 ஆயிரத்து 600 பேரில், 15 ஆயிரத்து 865 மாணவர்களும், 14 ஆயிரத்து 852 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 717 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.22 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த தேர்ச்சி விகிதத்தின்படி, தமிழகத்தில் மாநில அளவில் கடலூர் மாவட்டம் 21-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் 10ஆம் வகுப்பு தேர்வில் 93.43 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் 26-ஆம் இடம்

கள்ளக்குறிச்சி, மே 20 – மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 93.43 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 26-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற பொதுத்தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 228 அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10,105 மாணவர்கள், 9,880 மாணவிகள் என மொத்தம் 19,985 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை வெளியான தேர்வு முடிவுகளின்படி, மாவட்டத்தில் 18,672 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.43 சதவீதமாகும். தேர்வு எழுதிய 10,105 மாணவர்களில் 9,246 பேர் தேர்ச்சி பெற்று 91.50 சதவீத தேர்ச்சியும், 9,880 மாணவிகளில் 9,426 பேர் தேர்ச்சி பெற்று 95.40 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 3.90 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 86.91 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 93.43 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டை விட 6.52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநில தரவரிசையில் கடந்த ஆண்டு 37-ஆம் இடத்தில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்த ஆண்டு 11 இடங்கள் முன்னேறி 26-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 83.11 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 91.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.86 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் மாநில அளவில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு 36-ஆம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 10 இடங்கள் முன்னேறி 26-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 26 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 62 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

மீனவர் சடலமாக மீட்பு

கடலூர், மே 20- கடலூர் தேவனாம்பட்டினம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த மீனவர் மூர்த்தி (57) கடலில் மூழ்கி உயிரிழந்தார். இவர் தனியாக என்ஜின் இல்லாத பைபர் படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி காலை வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மூர்த்தி, மறுநாள் 19-ஆம் தேதி வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் மற்றும் மீனவர்கள் படகுகளில் கட லுக்குச் சென்று அவரைத் தேடினர். அப்போது கடலில் மூர்த்தி சடலமாக மிதப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட மீனவர்கள் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த தேவனாம்பட்டினம் காவல்துறை யினர், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூர்த்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை யினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருளில் மூழ்கியுள்ள போக்குவரத்து கழக அரசு ஊழியர் நகர் தெருவிளக்கு, குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் புகார்

விழுப்புரம், மே 20- விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி ஊராட்சிக்குட்பட்ட போக்குவரத்து கழக அரசு ஊழியர் நகரில் தெருவிளக்குகள் எரியாததாலும், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் விழுப்புரம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ரூ.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளைப் பராமரித்துச் சரி செய்யாததால், ஒட்டுமொத்தப் பகுதியும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், இப்பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூடக் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.சகாதேவன், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். எனவே, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த தெருவிளக்குகளைச் சரி செய்யவும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போர்க்கால அடிப்படையில் போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.