முன்னறிவிப்பு இல்லாத ஜமாபந்தி: வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்
12 Jun 2026, 11:02 pm
<p><strong>முன்னறிவிப்பு இல்லாத ஜமாபந்தி: வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம் </strong></p><p>கடலூர், ஜூன் 12- கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 10 வட்டங்களில் இந்த ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையிலும், பண்ருட்டியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இருப்பினும், எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பகுதி மக்கள் வர வேண்டும் என்பது குறித்த முறையான முன்னறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இக்கூட்டம் நடப்பது தெரியாமல் பொதுமக்கள் வராததால், மாவட்டத்தின் பெரும்பாலான வட்டாட்சியர் அலுவலகங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டன.</p>
