தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்காது! சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜிவ் உறுதி

18 Aug 2026, 8:56 pm
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்காது! சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜிவ் உறுதி

கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்காது!

சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜிவ் உறுதி

சென்னை, ஆக. 18 -தமிழ்நாடு சட்டமன்றத்தில், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செவ்வாயன்று கொண்டு வந்தார்.அப்போது பேசிய அவர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும் எனவும்,இது தொடர்பான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து பேசியசிபிஐ உறுப்பினர் மாரிமுத்துவும் அதே பிரச்சனையை எடுத்துரைத்து, அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதில்

இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜிவ் பதிலளித்தார். அப்போது, இந்துஸ்தான் ஆயில் கம்பெனி லிமிடெட்9.5 கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக் காலத்திலேயேஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான மூன்று கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் விளக்கினார். 2006-இல் ஒரு கிணற்றுக்கும், 2009-இல் இரு கிணறுகளுக்கும் திமுக ஆட்சியிலும், 2012-இல் ஒரு கிணற்றுக்குஅதிமுக ஆட்சியிலும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், அவற்றுள் மூன்று கிணறுகள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்பதை அரசு அனுமதிக்காது

ஒரு கிணற்றில் மட்டும் உற்பத்தியாகும் எண்ணெய், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள இந்துஸ்தான் ஆயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அந்த வளாகத்தில் கூடுதலாக நான்கு கிணறுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார். மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழ லைப் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதி க்காது என அவர் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.