அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம்: பள்ளி நிர்வாகம் அதிரடி
17 Jul 2026, 12:23 am
<p><strong>அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம்: பள்ளி நிர்வாகம் அதிரடி </strong> </p><p>கடலூர், ஜூலை 15– கடலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி விதிமுறைகளைப் பின்பற்றாத மாணவர்களுக்குப் பள்ளியிலேயே முடி திருத்தம் செய்யப்பட்டது. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை, மாணவர்கள் தங்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்கள் கயிறு அணிவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கற்ற சிகை அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாணவர்கள் பள்ளி விதிகளை மீறி, நீளமான மற்றும் நவீன பாணி (புல்லிங்கோ) சிகை அலங்காரங்களுடன் பள்ளிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் பலமுறை அறிவுறுத்தியும், மாணவர்கள் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பள்ளித் தலைமையாசிரியை செந்தாமரைச்செல்வி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் திருமாவளவன் முன்னிலையில், முடி திருத்தும் தொழிலாளர்களை வரவழைத்து, பள்ளி விதிமுறைகளுக்கு முரணாக இருந்த ஏராளமான மாணவர்களுக்கு அங்கேயே முடி திருத்தம் செய்யப்பட்டது. மாணவர்கள் சீருடை நடைமுறை மற்றும் பள்ளி கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில்</p>
